2வது கணவன்..! 3வது குழந்தை..! 38 வயது நடிகைக்கு மீண்டும் வளைகாப்பு! யார் தெரியுமா?

பிரபல நடிகைக்கு அமெரிக்காவில் வளைகாப்பு நடந்திருப்பது மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மலையாள திரையுலகில் முன்னாள் கதாநாயகிகளில் ஒருவர் திவ்யா உன்னி. இவர் சினிமாவுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்‌. தமிழ் திரையுலகில் சபாஷ், கண்ணன் வருவான் முதலிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரமாண்ட நடன கலைஞரும் கூட. குச்சிப்புடி, மோஹினி ஆட்டம் ஆகியவற்றில் வித்தகர். நடனத்திற்காக பல்வேறு பட்டங்களையும் பெற்றுள்ளார். 

2002-ஆம் ஆண்டில் சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு அர்ஜுன் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். 2016-ஆம் ஆண்டில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் விவாகரத்து பெற்றனர்.

அதன் பின்னர் திவ்யா, அருண்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் நகரில் செட்டில் ஆயினர். அதே நகரிலேயே "ஸ்ரீபடம் தி ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்" என்ற நடன பள்ளியை தொடங்கினார். அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு குச்சிப்புடி, மோகினி ஆட்டம், பரதநாட்டியம் ஆகிய நடனங்கள் பயிற்சியாக அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் திவ்யா கர்ப்பமானார். வளைகாப்பு நிகழ்ச்சி அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பலரும் திவ்யாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.