கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் தற்கொலை ஏன்? பதற வைக்கும் காரணம்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வீ.பி. சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதும் காரணத்தை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.


1988-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை வீ.பி. சந்திரசேகர் இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக ஈடுபட்டு வந்தார். நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் தமிழில் வர்ணனை செய்தார். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராவார். சென்னை மயிலாப்பூரில் தன்னுடைய சொந்த வீட்டில் சந்திரசேகர் தன் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வாழ்ந்து வந்தார். 

யாரும் எதிர்பாராதவாறு நேற்று மாலை தன்னுடைய வீட்டில் சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் சந்திரசேகரின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை குறித்து காவல்துறையினர் சந்திரசேகரன் மனைவியிடம் விசாரித்தனர். அவர் கூறுகையில், "நேற்று மாலை 5:45 மணியளவில் அவருக்கு தேனீர் தருவதற்காக அவருடைய அறைக்கு சென்றேன். அப்போது அறையின் கதவு உள்தாளிட்டதிருந்தது. நெடு நேரம் கதவை தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்தேன். ஜன்னலின் மூலம் எட்டிப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்" என்று கூறினார்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த சம்பவமானது மயிலாப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.