நட்சத்திரம் பார்த்து காரியம் செய்தால் நினைத்தது நடக்கும்..! உத்திராட நட்சத்திரத்தில் என்னென்ன காரியங்கள் செய்யலாம்?

நமது முன்னோர்கள் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களை வகுத்து வைத்துள்ளனர்.


அவை யாதெனில் எல்லா நட்சத்திரங்களிலும், எல்லா காரியங்களையும் செய்வது என்பது உசிதமானதல்ல. சில காரியங்களுக்கு இந்த நட்சத்திரங்கள் மட்டுமே உகந்தது என்று நம் முன்னோர்கள் பகுத்து அதை நமக்கு அளித்தும் சென்றுள்ளனர். 

எந்த ஒரு காரியமும் செய்வதற்கு முன்பாக அன்றைய தினத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்த்து, நாம் செய்யும் காரியத்திற்கு இந்த நட்சத்திரம் ஏதாவது ஒரு வகையில் ஆதரவாக இருக்கின்றதா? என்று ஆராய்ந்து செய்வது, செய்ய நினைத்த காரியங்களில் எதிர்பார்த்த பலன்களை நாம் அடைய உதவும். 

அந்த வகையில் இன்று நாம் உத்திராட நட்சத்திரத்தன்று என்னென்ன காரியங்கள் செய்யலாம்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். நிச்சயதார்த்தம் செய்ய நல்ல நாள். திருமணம் செய்ய உகந்த நாள்.  வளைகாப்பு (சீமந்தம்) நடத்த சிறந்த நாள்.  பெயர் சூட்டுவதற்கு ஏற்ற நாள். குழந்தைக்கு சாதம் ஊட்டுவதற்கு சிறப்பான நாள். காது குத்துவதற்கு நல்ல நாள். மொட்டை அடிக்க உகந்த நாள். தானியங்கள் அறுவடை செய்ய சிறந்த நாள். 

விதை விதைக்க ஏற்ற நாள். தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க சிறப்பான நாள். உயர் பதவிகளை ஏற்க நல்ல நாள். நந்தவனம் அமைக்க உகந்த நாள். முத்து, சங்கு சேகரிக்க சிறந்த நாள். குழந்தையை தொட்டிலில் போட ஏற்ற நாள். குழந்தைகளை பள்ளியில் சேர்க்க சிறப்பான நாள். புதுமனை புகுவதற்கு நல்ல நாள். வீடு, வாகனங்கள் வாங்க உகந்த நாள். சாஸ்திரம் கற்பதற்கு சிறந்த நாள். புதியதாக சமையல் தொழில் தொடங்க ஏற்ற நாள். 

மல்யுத்தம் செய்ய சிறப்பான நாள். மாயவித்தைகள் பயிலுவதற்கு நல்ல நாள். பயணங்கள் மேற்கொள்ள உகந்த நாள். வங்கி கணக்கு தொடங்க சிறந்த நாள். வியாபாரம் தொடங்குவதற்கு ஏற்ற நாள். புதிய வேலையில் சேர்வதற்கு சிறப்பான நாள். நடன அரங்கேற்றம் செய்ய நல்ல நாள். பத்திரங்கள் பதிவு செய்ய உகந்த நாள். உயில் எழுதுவதற்கு சிறந்த நாள்.