99 பேருடன் விழுந்து வெடித்த விமானம்..! 97 பேர் பலி..! 2 பேர் மட்டும் உயிர் பிழைத் அதிசயம்..! எப்படி தெரியுமா?

பாகிஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்தில் தப்பித்த ஒருவர், அந்த பரபரப்பான நிமிடங்கள் பற்றி கூறியிருப்பது கேட்போரை பதற வைத்துள்ளது.


சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தலைநகரான லாகூரிலிருந்து கராச்சிக்கு 99 பேருடன் விமானம் புறப்பட்டது. கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கிய போது விமானம் தரையிறங்க முற்பட்டடது. 2-வது முறை தரையிறங்க முற்பட்டபோது ஏதோ கோளாறு ஏற்பட்டதால் எதிர்பாராவிதமாக விமான நிலையத்திற்கு அருகிலிருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். 80-க்கும் மேற்பட்டோரின் உடல்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆனால் குடியிருப்பு வீடுகள் பல சேதமடைந்துள்ளதால், அங்கு உயிரிழந்தோர் விமானத்தில் இருந்து விழுந்தனரா அல்லது வீடுகளில் இருந்தவர்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் இருந்து பிழைத்தவர்கள் பொறியாளர் முகமது சுபேர் மற்றும் பஞ்சாப் வங்கியின் தலைவர் சாபர் மசூத் ஆகியோர் என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவர்களுக்கு கராச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜியோ செய்தி நிறுவனத்திற்கு முகமது சுபேர் பேட்டியளித்துள்ளார், "முதல் தரையிறக்கத்தின் பிறகு மீண்டும் விமானம் வானில் பறந்தது. சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு விமானி மீண்டும் தரையிறக்க போவதாக அறிவித்தார். ஆனால் அதற்குள் விமானம் குடியிருப்புக்குள் ஒரே ஒரு விபத்து ஏற்பட்டது.

என்னை சுற்றி பல்வேறு இடங்களிலும் அழுகுரல்கள் கேட்டன. புகை மற்றும் நெருப்பு மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. ஒரு வழியாக வெளிச்சம் நிறைந்த திசைக்கு நடந்து அங்கிருந்து பத்து அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து உயிர் பிழைத்தேன்" என்று கூறினார்.

இந்த விபத்தானது உலகளவில் வைரலாகி வருகிறது. பல்வேறு உலக தலைவர்களும் இந்த விபத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.