மோடிக்கு நறுக்சுருக்கென அஞ்சு கேள்விகள்

பிரதமர் மோடிக்கு இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நறுக்சுருக்கென 5 கேள்விகளை கேட்டுள்ளார்


பிரதமர் மோடி சமீபத்திய தேர்தல் பிரசாரத்தில், ‘கடந்த 2014 - 2019 ஆம் ஆண்டு இடையில் ஆன காலகட்டத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியது’ என்று கூறியிருந்தார்.

பிரதமர் மோடிக்கு இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நறுக்சுருக்கென 5 கேள்விகளை கேட்டுள்ளார்

1. பிரதமர் தனது கூற்றினை நிரூபிக்கும் வகையிலான தரவுகளை பொதுவெளியில் வெளியிடுவாரா

2. ஏன் 2019 ஆம் ஆண்டுடன் நிறுத்தி விட்டீர்கள் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை என்ன நடந்தது

3. ஒரு துறையில் மட்டுமே ஆறு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது எனில் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் மொத்தம் எத்தனை வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது

4. ஏன் படித்த இளைஞர்களின் வேலையின்மை 42 சதவிகிதமாக இருக்கிறது

5. 2024 ஆம் ஆண்டு ஐஐடியில் இருந்து வெளியான பட்டதாரிகளின் 38 சதவிகிதம் பேர் இன்னமும் வேலை கிடைக்காமல் இருக்கிறார்களே ஏன்?

இதற்கு மோடி டீம் என்ன பதில் சொல்லப்போகிறது..?