பசுமாடுகளை விடுங்க..! எங்களை கவனிங்க..! மோடிக்கு நாகலாந்து அழகி விடுத்த பகிரங்க கோரிக்கை!

மாடுகளை கவனிப்பது காட்டிலும் பெண்களை கவனிக்குமாறு பிரதமர் மோடிக்கு அறிவுறுத்துகிறேன் என்று ஒரு பெண் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக நாகாலாந்து மாநிலம் திகழ்கிறது. இந்த மாநிலத்தில் "மிஸ் கோஹிமா 19" என்ற மாநில இளம் பெண்களுக்கான அழகிப்போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாடல் அழகிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்தப்போட்டியில் வீக்கோனுவா சச்சு என்ற இளம்பெண் 2-வது இடத்தை பெற்றார்.

அப்போது தேர்வாளர்கள் அழகிகளிடம் மாதிரி கேள்விகளை முன்வைத்தனர். சச்சுவிடம் ஒரு நடுவர், "நீங்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியிடம் உரையாடினால், அவரிடம் என்ன கேட்பீர்கள்" என்று கேட்டார். சில மணித்துளிகள் யோசித்த சச்சு,  "இந்திய பிரதமரான நரேந்திர மோடியிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தால், பசுக்களை கவனிப்பதை காட்டிலும் பெண்களை கவனிக்குமாறு அறிவுறுத்துவேன்" என்று கூறினார்.

அரங்கிலிருந்த அனைவரும் சிரித்து கரவொலி எழுப்பினர். இதுவரை 60,000 பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.