தி.மு.க.வின் பெயரைக் கேட்டாலே அலறும் ஃபைனான்ஸ் பார்ட்டிகள்... அதிர்ச்சியில் அறிவாலயம்.

தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்துவிடலாம் என்று முன்பு நம்பிக்கை கொடுத்தவர்கள்கூட, இப்போது பின்னங்கால் பிடறிபட ஓடுவதைக் கண்டு அதிர்ந்து நிற்கிறது அறிவாலயம்.


ஆம், தென் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ஏற்றுமதியாளருக்கு திமுக முக்கிய புள்ளியிடமிருந்து போன். குறிப்பிட்ட தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை கடகடவென வாசித்த அவர், ‘’ இவர்களுக்கெல்லாம் தலா 3 சி கொடுத்திடுங்க. எலெக்‌ஷன் முடிஞ்சதும் அமௌன்ட் உங்க கைக்கு வந்துவிடும்’’ என சொல்லியிருக்கிறார். பதிலுக்கு அந்த ஏற்றுமதியாளர், ‘’ அமௌன்ட் பிரச்சனையில்லை.

ஆனா அதை வெளியே எடுத்து அந்தந்த இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதுதான் தலைவலி. அதனால இந்தமுறை விட்டிடுங்க. சாரி’’ என்றபடி தொடர்பை துண்டித்திருக்கிறார். இது ஒரு உதாரணம் மட்டுமே.

இதேபோல திமுக தனது வழக்கமான தேர்தல் கால பைனான்ஸ் பார்ட்டிகளுக்கு போனை போடுவதும், அவர்கள் மறுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இது பற்றி பைனான்ஸ் பார்ட்டிகளிடம் கேட்டபோது, ’’முந்தைய சமயங்களில் உதவி பண்ணினது உண்மைதான். ஆனால் இப்ப நிலைமை சரியில்லை. ஐடி ஆட்கள் கண்ணில் விளக்கெண்ணையை விட்டிட்டு கண்காணிக்கிறாங்க. இந்த சமயத்தில் பைனான்ஸ் அரேஞ்ச் பண்ணி கொடுக்கிறது...எங்க தலையில் நாங்களே மண்ணை வாரி போடறதுக்கு சமம்’’ என்கிறார்கள்.

வழக்கமான சோர்ஸ்கள் மறுத்துவிட்ட நிலையில் வேறு எந்த வழியில் வேட்பாளர்களிடம் ’சத்து மாத்திரைகளை’ கொண்டு சேர்ப்பது என்கிற தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறது அறிவாலயம்.

பரிதாபம்தான்.