அப்பா அம்மா பாவம்! ஓடி வந்த மகள் முகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூர தந்தை! அதிர வைக்கும் காரணம்!

பெற்றெடுத்த மகளின் முகத்தில் தந்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள சம்பவமானது உக்ரைன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் நடாலியா. இவருடைய மகளின் பெயர் அண்ணா கிறிஸ்டிகா. அண்ணாவின் வயது 16. இவருடைய தந்தை குடிபோதைக்கு அடிமையானவர். தினமும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு நடாலியாவை கொடுமைப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

சமீபத்தில் கணவன் மனைவியிடையே அதி பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து தாயை காப்பாற்றுவதற்காக அண்ணா தன்னுடைய தந்தையை இறுக்கி கட்டிப்பிடித்துள்ளார். அண்ணாவின் குடியிலிருந்து தப்பிக்க இயலாத தந்தை வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். கணவர் கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறினார் என்று நடாலியா நினைத்து கொண்டிருந்தார்.

ஆனால் திடீரென்று வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த அண்ணாவின் தந்தை, அண்ணாவின் அறையை வெளிப்பக்கமாக பூட்டியுள்ளார். பின்னர் அறை முழுவதிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தப்பிக்க முயன்று அண்ணாவின் முகத்திலும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். 

அண்ணாவின் அலறல் சத்தத்தை கேட்ட அவருடைய சகோதரர், அவரை காப்பாற்றுவதற்காக கடுமையான முயற்சியை மேற்கொண்டார். உதவிக்கு தந்தையை அழைத்தபோது, அவரோ அண்ணா தீயில் கருகி சாகட்டும் என்று மனிதநேயமற்று பேசியுள்ளார்.

உடனடியாக உறவினர்களின் உதவியுடன் அண்ணாவை காப்பாற்றி அவருடைய சகோதரர் மருத்துவமனையில் அனுமதித்தார்.  அண்ணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே சம்பவம் அறிந்து காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் அண்ணாவின் தந்தையை கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது உக்ரைன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.