முறை தவறிய உறவு..! மகளை எய்ட்ஸ் நோயாளி ஆக்கிய கொடூர தந்தை..! தஞ்சை பரபரப்பு!

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுக்கூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய வயது 37. இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இவர் தன்னுடைய 10 வயது மகளுடன் வசித்து வந்தார்.

மாணவியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த ஓரிரு அந்த மாணவி தன்னுடைய தந்தையால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

ஆசிரியர்கள் சைட்லைன் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் பெற்ற அதிகாரிகள் உடனடியாக குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மாணவியை மீட்டெடுத்து அருகிலுள்ள காப்பகத்தில் அனுமதித்தனர். அந்த மாணவி திடீரென்று மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

அவரை பரிசோதித்து பார்த்த போது அவருக்கு எய்ட்ஸ் நோயிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக முருகனையும் காவல்துறையினர் பரிசோதித்தனர். அப்போது அவருக்கும் எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் இன்று இந்த குற்றத்திற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. குமாருக்கு 4 ஆயுள் தண்டனையும், 6 மாத சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.