அம்மா நாங்களும் உங்ககிட்ட வர்றோம்..! சித்தி விளக்கமாத்தால அடிக்கிறாங்க! சாவதற்கு முன்னர் மகன் பதிவு செய்த பகீர் வீடியோ!

சமீபத்தில் மகன்களுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை வழக்கில் திடீர் திருப்பமாக போலீசார் பெண் ஒருவரை காவலில் வைத்து விசாரித்து வருவது இந்த வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் உள்ள அலங்காநல்லூர் பகுதிக்கு அருகே உள்ள அரியூர் என்ற கிராமத்தை சேர்ந்த 42 வயதான சுந்தர் என்பவரின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது கணவர் சுந்தர் தனது மகன்களுடன் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தபோது அவரது செல்போனை கைப்பற்றி சோதனை செய்தனர். அந்த சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குடிபோதையில் இருந்த சுந்தர் தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது வாழ்வில் ஏற்பட்ட கசப்பான விஷயங்களை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருந்தார்.

அந்த வீடியோவில் தனது மனைவி மறைவுக்குப்பின் லஷ்மி என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. அவரை வீட்டிற்கு வரவழைத்து இவர் குடும்பம் நடத்தியுள்ளார் என்பது தெரியவந்தது. சமீபத்தில் லட்சுமி தனது மகன்களை அடித்து கொடுமைப் படுத்தியதாகவும் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் அதில் அவர் தெரிவித்திருந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக லக்ஷ்மி கோபித்து கொண்டு அவரது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் , இதன் காரணமாக மனம் உடைந்த சுந்தர் தனது மகன்களுக்கு வாழைப்பழத்தில் விஷத்தை கலந்து கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்வதாகவும் அதில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தன் மனைவி மகன் உட்பட 4 பேரின் மறைவுக்கும் லட்சுமி தான் காரணம் எனவும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.இதே போல் தற்கொலைக்கு முன்னதாக மகனும் அந்த வீடியோவில் பேசியுள்ளார். அதில் நீங்கள் சென்ற பிறகு சித்தி என்னை விளக்கமாத்தால் அடிக்குறாங்க, இனிமே நான் அவர்களிடம் அடிவாங்கமாட்டேன், நானும் உங்களிடம் வருகிறேன் என்று இறந்து போன தாய்க்கு அவர் கூறியுள்ளது கேட்போரை கலங்க வைப்பதாக இருந்தது.

 இதன் காரணமாக லட்சுமி என்பவரை போலீசார் தங்களது காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.