அப்பாவோட ஃபிரண்ட்ஸ் 2 பேர்..! அப்பாவுக்கும் தெரியும்..! 10 வயது சிறுமி வயிறு வலிக்கு காரணமான பகீர் சம்பவம்!

10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக தந்தை உட்பட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோபிசெட்டிபாளையத்தில் அருகே கூகலூர் என்னுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே இருந்த குளத்துக்கடை என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு குமார் என்றால் கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய மனைவியை பிரிந்து 10 வயது மகள் மற்றும் 5 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதனிடையே இவருக்கு அதீத மதுப்பழக்கம் இருந்துள்ளது.

இரு குழந்தைகளும் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பள்ளியில் சேர்ந்து படித்து வந்தனர். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் சிறுமிக்கு அதிக வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பக்கத்து வீட்டுப்பெண்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்று மருந்து வாங்கி கொடுத்துள்ளனர்.

அப்போது அந்த சிறுமி தன்னை அழைத்து சென்றவர்களிடம் பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார். அதாவது தன்னை அதே பகுதியை சேர்ந்த மயில்சாமி அருணாச்சலம் ஆகியோர் பலமுறை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறியுள்ளார். தன்னுடைய தந்தைக்கு மது வாங்கி தருவதாகவும், தனக்கு உணவு வாங்கி தருவதாகவும் கூறி, அந்த சிறுமியை அவர்களுடைய இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 

15 நாட்கள் அவர்கள் இந்த சிறுமியை பாலியல் ரீதியில் துன்புருத்தியுள்ளனர். உடனடியாக பெண்கள் அந்த சிறுமியை கோபிச்செட்டிபாளையம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மருத்துவர்கள் அந்த சிறுமி பலமுறை பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதை உறுதி செய்தனர்.

உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குமார், அருணாச்சலம், மயில்சாமி ஆகியோர் மீது காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அருணாச்சலத்தை கைது செய்தனர். 

மற்ற இருவரையும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இது என்னுடைய ஊர் பொதுமக்கள் மயில்சாமியின் வீட்டிற்குள் புகுந்து அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவமானது கூகலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.