மனைவியின் மகளுடன் சல்லாபம்! வசமாக சிக்கிய கணவன்! நீதிமன்றம் கொடுத்த தரமான தண்டனை!

வளர்ப்பு மகளுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த கொடூர தந்தைக்கு, 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


காங்கேயத்தைச் சேர்ந்த 28 வயது கூலித் தொழிலாளிதான் இத்தகைய பிரச்னையில் சிக்கியுள்ளார். இவர் ஏற்கனவே திருமணமான பெண்ணை 2வது முறையாக திருமணம் செய்துகொண்டார். அந்த பெண்ணிற்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்தன.

கடந்த 8 ஆண்டுகளாக, குறிப்பிட்ட கூலித்தொழிலாளி அந்த பெண் உடன்  குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு, மீண்டும் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

மொத்தம் 4 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், குறிப்பிட்ட கூலித்தொழிலாளிக்கு, தனது மனைவியின் முதல் திருமணத்தில் பிறந்த 11வயது மகள் மீது சபலம் ஏற்பட்டுள்ளது. அவர், கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தபோது, கடந்த 2018ம் ஆண்டில், சிறுமி தனியாக இருந்த வாய்ப்பை பயன்படுத்தி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

இதுபற்றி, தனது அம்மாவிடம் சிறுமி புகார் கூறவே, அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். வெளியில் தங்கி படித்துவந்த நிலையில், கோடை விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது எல்லாம், கடந்த சில ஆண்டுகளாக, தந்தை தன்னை பாலியல் வல்லுறவு செய்து வருவதாகவும், வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டுகிறார் எனவும், அந்த சிறுமி தெரிவிக்கவே, அவளது தாய், உடனடியாக இதுபற்றி

போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், காங்கேயம் மகளிர் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அந்த கூலித்தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இதில், அந்த தொழிலாளிக்கு, சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்திற்காக 21 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக, 5 ஆண்டுகள் சிறை என மொத்தம் 26 ஆண்டுகளை சிறைத்தண்டனை விதித்து, நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். 

இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும், இது தவிர ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு தீர்ப்பு பல்வேறு தரப்பிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.