வருசத்துக்கு ஒரு முறை என் மகளுக்கு கன்னித் திரை சோதனை செய்வேன்! பிரபல பாடகர் வெளியிட்ட டாப் சீக்ரெட்!

பெற்ற மகளை ஒவ்வொரு ஆண்டும் கன்னித்தன்மை சோதனைக்கு உட்படுத்துவேன் என்று பிரபல பாடகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் பிரபல பாப் இசை கலைஞர்களில் கிளிப்போர்டு ஜோசப் ஹாரிஸ் என்பவரும் ஒருவர். இவருடைய இளைய மகளின் பெயர் டையஜா ஹாரிஸ். இவருடைய வயது 18. 

ஹாரிஸ் சமீபத்தில் பங்கேற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் தன்னுடைய மகளை பற்றி விமர்சிக்கும் கருத்துக்களை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

18 வயது நிரம்பிய தன்னுடைய மகளுக்கு ஆண்டுதோறும் கன்னித்தன்மை சிகிச்சையை நடத்திவருவதாக கூறியுள்ளார். மேலும் எந்தவொரு பெற்றோரும் தன்னுடைய குழந்தைகள் தானாக சீரழிய அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

டையஜா ஹாரிஸின் 16-வது பிறந்தநாள் இரவன்று, அனைத்து கொண்டாட்டங்களையும் முடித்தபின்னர் மறுநாளன்று முதன் முதலில் அவருக்கு கன்னித்தன்மையை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். அதன்பின் ஆண்டுக்கு ஒருமுறை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். 

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் தொடக்கத்தில் ஹாரிஸ் பொய் கூறுவதாக நினைத்துள்ளார். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அது உண்மை என்பதை உணர்ந்துள்ளனர்.

ஹாரிஸின் கருத்திற்கு எதிர்மறையான கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.