நீண்ட நாள் ஆசை‌‌..! வெறி..! நிறைவேறவில்லை! அதனால் இளம் டிவி நடிகை எடுத்த பகீர் முடிவு!

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெங்காலி சின்னத்திரை உலகில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வந்தவர் நடிகை சுபர்ணா ஜாஸ். இவருடைய வயது 23. சிறுவயதிலிருந்தே மிகப்பெரிய நடிகையாக வேண்டுமென்ற நோக்கத்துடன் ஈடுபட்டு வந்தார். பர்த்வான் என்னும் பகுதியை சேர்ந்தவர், படிப்பைத் தொடர்ந்து நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதற்காக கொல்கத்தாவிற்கு வந்துள்ளார்.

படித்துக்கொண்டே நடிப்பு வாய்ப்புகளை பல்வேறு ஆடிஷன்களில் நடித்து தேடி வந்துள்ளார். ஆனால் அவர் நினைத்தது போன்று நல்ல கதாபாத்திரங்கள் எளிதில் கிடைக்கவில்லை. பல மாதங்கள் ஏதாவது உரைத்த போதிலும் பெயர் சொல்லும் அளவிற்கு கதாபாத்திரங்கள் கிடைக்காத விரக்தியினால் அவர் மீண்டும் சொந்த ஊருக்கு சென்றார்.

சொந்த ஊருக்கு சென்ற பின்னர் மிகுந்த மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளானார். குடும்பத்தினர் அவரை மீட்க முயன்ற போதிலும் அவர்களால் இயலவில்லை. மன அழுத்தத்தை தாங்க இயலாமல் சுபர்ணா ஜாஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதனை பார்த்த அவருடைய குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர் ஆனால் சுபர்ணா ஜாஸை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உடனடியாக அவருடைய குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விரைந்து வந்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுபர்ணா ஜாஸின் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவமானது கொல்கத்தாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.