அட்வான்ஸ் வாங்கிவிட்டு கம்பி நீட்டிவிட்டார்! சிம்புவால் கோடிகளை இழந்து பரிதவிக்கும் சூர்யா உறவினர்!

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவமானது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மலையாளத்தில் முப்டி என்ற திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த திரைப்படத்தை நார்தன் என்பவர் இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான ஞானவேல்ராஜா நார்தனை கொண்டு அதே திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார். இந்தப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிப்பது போன்று முடிவு செய்திருந்தார்.

சிம்புவின் கால்ஷீட்டை 3 மாதங்களுக்கு முதலில் ஞானவேல்ராஜா பெற்றிருந்தார். ஆனால் சம்போ ஒரு மாதம் மட்டுமே நடித்து கொடுத்து திடீரென்று வெளிநாடு சென்றுவிட்டார். இதனால் அவரால் படத்தில் நடிக்க இயலவில்லை. மேலும் அவருடைய கால்ஷீட் கிடைக்காததால் ஞானவேல்ராஜா கடுமையான நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளார். அவருடைய கால்ஷீட்டுக்காக ஞானவேல்ராஜா நெடுநாட்கள் காத்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியான சேகர் என்பவரிடம் நிகழ்ந்தவற்றை கூறி சிம்புவின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். மனுவை விசாரித்த சேகரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே மாநாடு படத்தின் போது ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனையால் அந்த படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி, தயாரிப்பு சங்கத்தில் வழக்குப்பதிவு செய்து படப்பிடிப்பை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.