காதலியுடன் நெருக்கமாக இருந்த கணவன்! கண்டுபிடித்து நேரில் சென்ற மனைவி! பிறகு அரங்கேறிய சம்பவம்! வைரல் வீடியோ!

கணவனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணை மனைவி கண்மூடித்தனமாக அடைத்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சீனாவில் ஜூன்யி என்ற நகரம் உள்ளது. இங்கு ஜியா டிங் என்பவர் வசித்துவருகிறார். அங்குள்ள முக்கியமான கட்சியில் மிகப்பெரிய பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 

ஆனால் இவர் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி இருவரும் இருக்கும் இடத்திற்கே சென்று சண்டை போட்டுள்ளார். அப்போது கள்ளக்காதலி, "இது உங்கள் பிரச்சனை. இதில் எதற்கு என்னை சிக்க வைக்கிறீர்கள்" என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஜியா டிங்கின் மனைவி, "என் கணவனை மயக்கி வைத்தாய். இப்போது கையும் களவுமாக சிக்கிக் கொண்டபின் சம்பந்தமில்லை என்று கூறுகிறீர்களா" என்று கேள்வி கேட்டு அந்தப் பெண்ணை சரமாரியாக அடித்துள்ளார்.

இந்த காட்சிகளை நேரில் கண்டு வந்த இளைஞரொருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவானது சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சீனா நாட்டின் மிகப்பெரிய கட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் வகிப்பவர் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதனால் அவருடைய பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

இந்த சம்பவமானது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.