நள்ளிரவில் வெடித்த ஃபிரிட்ஜ்! நியூஸ் ஜெ செய்தியாளர் குடும்பத்தோடு பலியான பரிதாபம்! பதற வைக்கும் சம்பவம்!

இரவில் உறங்கி கொண்டிருந்தபோது குளிர்சாதனப்பெட்டி வெடித்தது நியூஸ் ஜே தொலைக்காட்சியின் பத்திரிக்கையாளர் ஒருவர் குடும்பத்தோடு இழந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நியூஸ் ஜே அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி நாளேடாகும். இதன் செய்தியாளராக பிரசன்னா பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவியின் பெயர் ரேவதி. நேற்றிரவு இவர் தன் மனைவியின் மற்றும் மாமியாருடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். 

திடீரென்று குளிர்சாதன பெட்டியில் இருந்து புகை வெளியேறியுள்ளது.  பின்னர் குளிர்சாதன பெட்டி எரிந்து கருகியது. தீ பரவியதில் பிரசன்னா, அவர் மனைவி மற்றும் மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.