சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168! ரஜினிக்கு ஜோடியாகும் பிரபல நடிகரின் மனைவி! யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் ஜோதிகா அவருக்கு ஜோடியாக களமிறங்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.


நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக நடித்து முடித்துள்ள படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்து ரிலீஸ் ஆவதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்தில் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இது அவருடைய 168-வது படமாகும். இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாக கூறப்படுகிறது. 

இந்த படமானது ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பிரபல நடிகை ஜோதிகாவை படக்குழுவினர் தொடர்பு கொண்டு வருகின்றனர். விரைவில் நல்ல முடிவை எதிர் பார்க்கலாம் என்று படத்தின் இயக்குநரான சிவா கூறியுள்ளார்.

இந்த படத்திற்கு "தலைவர் 168" என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகை ஜோதிகா ஏற்கனவே ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பானது ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.