எஸ்எஸ் மியூசிக்கின் பூஜா நியாபகம் இருக்கா? 2வது கணவருடன் அவர் கொண்டாடிய தேனிலவு புகைப்படங்கள் உள்ளே..!

பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளினியான ஒருவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னர் "எஸ் எஸ் மியூசிக்" என்ற பிரபல சேனல் இயங்கி வந்தது. இந்த சேனலை பார்ப்பதற்கு என்று கோடான கோடி இளைஞர்கள் கிடந்தார்கள். ஏனென்றால் இந்த சேனலில் பூஜா ராமச்சந்திரன் என்ற இளம்பெண் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.

அவருடைய அழகில் மயங்கி கிடந்த இளைஞர்கள், காலப்போக்கில் அவருடைய ரசிகர்களாகவும் மாறினர். ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்த நடையில் மிகவும் சுவாரஸ்யமாக நேயர்களிடம் உரையாடும் தன்மையை கொண்டவர். இதனால்தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவானது. 

அதன்பின்னர் தொலைக்காட்சியிலிருந்து விடுபட்டு, "நண்பன்", "காதலில் சொதப்புவது எப்படி" ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் ஏதோ ஒரு வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

அப்போது இவர் பிகினி உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். பிங்க் நிற மேலாடையும், கருப்பு நிற நிக்கரும் அணிந்து ரசிகர்களுக்கு சூடேற்றும் வகையில் புகைப்படத்திற்கு ஃபோஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன‌.