விஸ்வாசம் வசூல் ரூ.80 கோடி தான்! ரூ.125 கோடி என்று கூறியது பொய்! ஒப்புக் கொண்ட தயாரிப்பாளர்!

கடந்த பொங்கலுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட திரைப்படமும் , அஜித் குமார் நடிப்பில் விசுவாசம் திரைப்படமும் திரைக்கு வந்தன.


இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால், படத் தயாரிப்பாளர்களுக்கு இந்த இரண்டு திரைப்படமும் நல்ல லாபத்தை கொடுத்ததாக தயாரிப்பாளர்கள் இடையே தகவல் வெளியாகியது.

குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் முதல் 8 நாட்களில் 100 கோடியை வசூலித்ததாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியது . அதே நேரத்தில் விசுவாசம் திரைப்படத்தை வினியோகம் செய்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்  நிறுவனம் விசுவாசம் திரைப்படம் 8 நாட்களில் 125 கோடியை வசூலித்ததாக செய்தியை வெளியிட்டது. 

ஆனால் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் விசுவாசம் திரைப்படம் முதல் எட்டு நாட்களில் 80 கோடியை மட்டுமே வசூலித்ததாக விசுவாசம் திரைப்படத்தின் விநியோகஸ்தர் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். 

மேலும் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக மட்டுமே 125 கோடி வசூல் செய்தது என கூறியதாகவும், ஆனால் உண்மையிலேயே 80 கோடி தான் விசுவாசம் திரைப்படம் 8 நாட்களில் வசூலிப்பதாக கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் தன்னிடம் கூறியதாகவும் பேட்டி ஒன்றில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார் .

படத்தின் விநியோகஸ்தரான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளரிடம் சென்று கணக்கு காட்டிய போது 80 கோடி ரூபாய்க்கு தான் கணக்கு காட்டினார். அவரிடம் தயாரிப்பாளர் நீங்கள் தானே 8 நாட்களில் 125 கோடி என்று கூறினீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஒரு விளம்பரத்திற்காக அப்படி பொய் சொன்னதாக விநியோகஸ்தர் கூறியதாகவும் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கூறியுள்ளார்.