70 வயது தாத்தாவுக்கு மனைவியான 20 வயது இளம் பெண்! அசர வைக்கும் காரணம்!

70 வயது முதியவரை 20 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்டிருப்பது தாய்லாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தாய்லாந்து நாட்டில் "கோ ஷாங்" என்ற காஃபி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவரின் வயது 70. இவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார். இவர் திடீரென்று 20 வயதான இளம்பெண்னை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த திருமணத்தில் பலர் கலந்து கொண்டனர். அனைவரும் மணமக்களை வாழ்த்தினர். இந்த சம்பவம் குறித்த செய்திகள் சீனா தாய்வான் மற்றும் பிற நாட்டு வலைதளங்களில் வைரலாகியது. இந்த திருமணத்திற்கு வரதட்சணையாக 20 மில்லியன் ஃபாட் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து மணமகன் கூறுகையில், "நான் இந்த உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என் மனைவியை சரியான நேரத்தில் கரம் பிடித்து விடுவேன்; என்று கூறினேன் அவ்வாறே செய்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.