என் கோடிக்கணக்கான சொத்துகள் எல்லாம்..! மரணிக்கும் தருவாயில் நெகிழ வைத்த ஸ்ரீவித்யா! ஆனால் நடந்தது? அதிர வைக்கும் தகவல்!

பிரபல நடிகை ஸ்ரீவித்யாவின் இறுதி ஆசை நிறைவேறாமல் போன செய்தியானது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தென்னிந்திய திரையுலகில் 1970-ஆம் ஆண்டு தொடங்கி, கிட்டத்தட்ட 30-35 ஆண்டுகள் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீவித்யா. இவருடைய தாயாரின் பெயர் எம்.எல்.வசந்தகுமாரி. இவர் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத வித்துவான்.

சினிமாவில் அவ்வளவு ஆண்டுகள் உயரத்தில் இருந்தாலும், சொந்த வாழ்க்கையில் ஸ்ரீவித்யாவுக்கு பல சோகங்கள் நிறைந்திருந்தன. திருமண வாழ்க்கை தோல்வி அடைந்தது அவருக்கு விழுந்து பெரிய அடியாக அமைந்திருந்தது. யாரும் கவனிப்பதற்கு இல்லாமல், அன்பிற்கும், பாசத்திற்கும் ஏங்கி தன்னுடைய கடைசி சில வருடங்களை வீட்டில் கழித்தார்.

2003-ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது அவர் அறிந்தார். நிறைய ஆண்டுகள் உயிருடன் வாழ இயலாது என்பதை அறிந்த அவர், தன்னுடைய கோடிக்கணக்கான சொத்துக்களை கலையில் ஆர்வம் கொண்ட ஏழை,எளிய மாணவர்களின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் அமைந்திட வேண்டும் என்று உயில் எழுதியுள்ளார். இதனை தனக்கு நெருங்கிய நபர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஸ்ரீவித்யாவின் கடைசி ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.