கால் டாக்சி பயணம்..! பிரபல நடிகை பக்கத்தில் வந்து டிரைவர் செய்த பகீர் செயல்! விபரீத அனுபவம்!

கால் டாக்சியில் சென்ற போது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் பற்றி பிரபல நடிகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலிவுட் திரையுலகில் நடித்து வரும் முன்னணி கதாநாயகிகளில் சோனம் கபூர் ஒருவர். பாலிவுட் திரைப்படங்கள், ஃபேஷன் ஷோக்கள் என்று தன்னை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதை முதன்மையாக நினைப்பவர். சமூக ஊடகங்களில் தன்னை மிகவும் ஈடுபடுத்தி கொள்பவர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிலையம் தன்னுடைய பொருட்களை கையாண்டது பற்றி கூறி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார.

தற்போது இவர் மற்றொரு பதிவை சமூக வலைதளங்களில் மேற்கொண்டுள்ளார். அதாவது இவர் லண்டன் நகரில் கால் டாக்ஸியில் சென்ற போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். ஆனால் அப்போது என்ன நடந்தது என்பது குறித்து அவர் தெளிவாகவும், வெளிப்படையாகவும் பதிவு செய்யவில்லை.

"கால்டாக்சியில் பயணம் செய்யும் போது மிகவும் ஜாக்கிரதையாக பயணம் செய்யுங்கள். மிக மிக ஜாக்கிரதையாக இருங்கள். முடிந்தவரை பொது வாகனங்களை உபயோகப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதுதான் மிகவும் பாதுகாப்பானது. நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்" என்று தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

உடனடியாக பலரும் தங்களுடைய அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர். மேலும் சில நபர்கள் லண்டன் நகரில் எவ்வாறு பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பது குறித்து சோனம் கபூருக்கு அறிவுரை தெரிவித்துள்ளனர். 

இந்த பதிவானது சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.