திருமணமான 2 ஹீரோக்களிடம் திருமணமான நடிகை கேட்ட ஒரே ஒரு கேள்வி..! என்ன தெரியுமா?

பிரபல கோலிவுட் நடிகை ஒருவர், 2 கதாநாயகர்களுக்கு தில்லாக சவால் விடுத்திருப்பது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளது.


சில ஆண்டுகளுக்கு முன்னர் கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக நடிகை ஸ்ரேயா வலம் வந்தார். இவர் நடித்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தன. இந்நிலையில் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகிலும் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் பிரபல தொழிலதிபரும் டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரத்திலேயே கணவருடன் தங்கிவிட்டார். அவ்வப்போது இந்தியாவிற்கு வந்து சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது கூட இவர் தமிழில் நடிகர் விமலுக்கு ஜோடியாக "சண்டைக்காரி" என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலினால் பார்சிலோனாவிலேயே கணவருடன் தங்கியுள்ளார். நேரத்தை கழிப்பதற்காக ஸ்ரேயா வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஸ்ரேயாவின் கணவரும் வீட்டு வேலைகளில் அவருக்கு பக்கபலமாக உதவும் புகைப்படங்களை ஸ்ரேயா சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதோடு நிற்காமல் பிரபல நடிகர்களான ஆர்யா, ஜெயம் ரவி, தெலுங்குத் திரையுலகின் முன்னணி கதாநாயகரான அல்லு அர்ஜுன் ஆகியோருக்கு தன்னுடைய கணவர் பாத்திரம் தேய்ப்பது போன்று தங்களால் இயலுமா என்ற சவால் விடுத்துள்ளார். மேலும் இவர்களையும் வீட்டில் பாத்திரம் தேய்க்குமாறு நடிகை ஸ்ரேயா குறிப்பிட்டுள்ளார்.

இந்த சவாலானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.