பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ராங்கி வனிதா! கஸ்தூரியை அடக்க அனுப்பி வைக்கப்பட்டாரா?

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதா மீண்டும் நுழைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சியானது சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. சென்ற வார இறுதியில் சரவணன் எலிமினேட் செய்யப்பட்ட காரணத்தை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 பிரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

முதல் வீடியோவில் கொண்டாட்டங்கள் சூழ பல ஆட்டக்காரர்கள் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது முக்கிய உறவினர் ஒருவர் வீட்டிற்கு வருவதாக அறிவிப்பு ஏற்பட்டது. அனைவரும் நடனமாடி விருந்தினரை வரவேற்க காத்திருந்தனர். 

அனைவரின் எதிர்பார்ப்பையும் தகர்க்கும் வகையில் நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். நடிகர் சேரன் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றார். அனைத்து உறுப்பினர்களும் ஷாக் ஆயினர். பின்னர் வனிதா ஒரு அழகிய நடனம் ஆடினார்.

இரண்டாவது வீடியோவில், வனிதா லாஸ்லியாவை பார்த்து பேசிக் கொண்டிருந்தார். மிஷன் லாஸ்லியா என அறிமுகம் செய்து லாஸ்லியாவின் மனதில் இருப்பதை கண்டுபிடிக்குமாறு நடிகை கஸ்தூரியிடம் கூறினார். பின்னர் கவினை பார்த்து, "உன்னிடம் பேசுவதற்கு வந்தேன். ஆனால் இப்போது பேசுவதாக இல்லை. உன் குணாதிசயத்தை அழித்து கொண்டாய்"என்று கூறினார்.

இன்று பிக்பாஸ் வீட்டில் நிறைய சம்பவங்கள் அரங்கேற உள்ளதாக கூறப்படுகின்றது.