3 நாட்களாக குடி..குடி..குடி..! கையில் மதுபாட்டில் உடல் முழுவதும் போதை..! நடிகை காஜல் வெளியிட்ட புகைப்படம்!

பிரபல தென்னிந்திய கதாநாயகி ஒருவர் மதுக்கு அடிமையாகியிருப்பது போன்று வெளியாகியுள்ள செய்தி அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தென்னிந்திய திரையுலகில் மிக முக்கியமான கதாநாயகிகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளன. விஜய், கார்த்தி ஆகிய முன்னணி கோலிவுட் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஒரு சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய கதாநாயகிகளில் இவரும் ஒருவர் தற்போது உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் அனைத்து திரையுலக பிரபலங்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஆகையால் வழக்கத்தைவிட அதிகமாக திரையுலக பிரபலங்கள் சமூகவலைதளங்களில் தங்களுடைய நேரத்தை செலவிடுகின்றனர்.

அவ்வகையில், காஜல் அகர்வால் நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்தியானது அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பேரதிர்ச்சியை தந்துள்ளது. "கடந்த மூன்று நாட்களாக நான் பார்த்த மதுவை என்னுடைய வாழ்நாளில் என் கல்லீரல் பார்த்ததில்லை" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

நோய் பாதிப்பு குறைவாகவுள்ள பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆகையால் கடந்த சில நாட்களாக குடிமகன்கள் மது வாங்குவதற்கு முண்டியடித்து செல்கின்றனர். தற்போது சமூகத்தில் மதிப்பு மிக்க நடிகை மதுவிற்கு அடிமையாகிவிட்டதாக வெளியிட்டுள்ள செய்தி மது பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.