தொழில் அதிபர் வீட்டில் ஐந்தே நிமிடம்..! பிரபல நடிகைக்கு ரூ.2 கோடி! ஏன் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் ஒரு ரிசப்ஷனில் குத்தாட்டம் ஆடி 2 கோடி ரூபாயை வாங்கிச் சென்றுள்ளார்.


பாலிவுட் நடிகைகளுள் பல்வேறு வெற்றிகளை கண்டவர் கத்ரீனா கைஃப். இந்நிலையில் உத்தரகண்டில் உள்ள பிரபல தொழில் அதிபரான குப்தா குடும்ப திருமண விழாவில் பங்கேற்றார். இவர் சிறப்பு விருந்தினராக வந்திருப்பார் என்று கருதப்பட்டது.

ஆனால் வியாழக்கிழமை அன்று நடந்த விழாவில், கத்ரீனா கைஃப் மற்றும் புகழ்பெற்ற ரேப் பாடகரான பாத்ஷா என்பவருடன் நடனமாடினார். தான் பாலிவுட் திரையுலகில் நடித்து ஆடிய பிரபல பாடலான‌ "ஷீலா கி ஜவானி" என்ற பாடலுக்கு அவர் நடனமாடி அங்கு கூடியிருந்தவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

இவர் சிவந்த நிற உடையிலும், கருப்பு நிற பூட்ஸிலும் வலம் வந்தார். இதற்காக கத்ரீனா கைஃப் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்வினை கண்ட விழாவிற்கு வந்த அனைவரும் கண்டு களித்தனர். வெறும் 5 நிமிட பாடலுக்கு ஆட தொழில் அதிபர் குப்தா காத்ரீனாவுக்கு 2 கோடி ரூபாயை வாரிக் கொடுத்துள்ளார். https://www.instagram.com/p/By92luNhbtL/