பிரபல கதாநாயகர் ஒருவர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அவருடைய தங்கையை திருமணம் செய்துகொண்ட செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகையுடன் முதல் திருமணம்! பிறகு அவரது தங்கையை 2வது மனைவியாக்கிய நவரச நாயகன்! பல வருட சீக்ரெட் அம்பலம்!

1980-களில் கதாநாயகனாக பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து வந்தவர் நடிகர் கார்த்திக். பன்முகத்தன்மை கொண்ட இவர், அந்த காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கி வந்தார். அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
கிழக்கே போகும் ரயில், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, கோபுர வாசலிலே, பிஸ்தா, அமரன், பூவரசன் முதலிய வெற்றி திரைப்படங்களில் கதாநாயகனாயாக நடித்திருந்தார். 1988-ஆம் ஆண்டில் இவர் நடிகை ராகினை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான புதிதில் இருவரும் மிகவும் அன்யோன்யமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் காலம் செல்ல செல்ல இருவருக்குமிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர்.
அதன் பின்னர் 1992-ஆம் ஆண்டில் இவர் தன் மனைவியான ராகினின் சகோதரியான ரதியை திருமணம் செய்துகொண்டார். தற்போது வரை ரதியுடன் வாழ்ந்து வருகிறார். சினிமாவில் நீண்ட காலம் இடைவெளி எடுத்துக்கொண்ட பின்னர், தற்போது தனக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார்.
மொத்தமாக கார்த்திக்குக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் கௌதம், கயன், தீரன் ஆகியோராவர். கடல் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிய கௌதம் கார்த்திக் நடிகர் கார்த்திக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கௌதம் கார்த்திக் வை ராஜா வை, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.