அமெரிக்காவுக்கே தலைமை நீதிபதியான பச்சைத் தமிழன்..! யார்? எப்படி தெரியுமா?

அமெரிக்காவில் அமைந்துள்ள புகழ்பெற்ற நீதிமன்றத்திற்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரையும் மகிழ செய்துள்ளது.


அமெரிக்காவில் உச்சநீதிமன்றமே முதன்மை பெற்ற நீதிமன்றமாகும். அதற்கு அடுத்தபடியாக கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள சர்க்யூட் நீதிமன்றம் புகழ் பெற்றதாகும். இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பானது சென்ற ஆண்டு முடிவடைந்தது. ஒரு புதிய தலைமை நீதிபதி தேர்ந்தெடுப்பதற்கு கடந்த சில வாரங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் நேற்று அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அறிவிக்கப்பட்டார். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தமிழரான ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் என்பவரே இந்த பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இவருடைய பிறப்பிடம் சண்டிகர் மாநிலம். திருநெல்வேலி மாவட்டத்தை அடுத்துள்ள திருவெங்கடபுரம் என்பது தான் இவருடைய தாயாரான சரோஜாவின் பிறப்பிடமாகும். இவருடைய தந்தையின் பெயர் பத்மநாபன் சீனிவாசன்.  இவர் அமெரிக்க ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.

முதன்முதலில் அமெரிக்காவிலுள்ள கென்சஸ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணியாற்றினார். அமெரிக்காவின் அப்பீல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்த ஹார்லி வில்கின்சன் என்பவரிடம் குமாஸ்தாவாக பணியாற்றி வந்தார். 2011-ஆம் முதல் முதன்மை துணை அட்டர்னி ஜெனரல் பொறுப்பு வகித்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பிற்கும் இவருடைய பெயர் பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெற்காசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும். தமிழர் ஸ்ரீ.சீனிவாசன் நீதிபதி பொறுப்பை பெற்றதற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.