அதிவேகத்தில் பறந்த கார்..! கட்டுப்பாட்டை இழந்த டிரைவர்! எதிரே இருந்த மின்கம்பம்! கோர விபத்தில் சிக்கி சிதைந்த இளம் நடிகர்!

பிரபல மலையாள நடிகர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவமானது திரையுலகத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மலையாள திரையுலகின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவர் பாசில் ஜார்ஜ். இவர் சமீபத்தில் வெளியான "பூவல்லியும் குஞ்சாடும்" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இவர் தன்னுடைய நண்பர்கள் 4 பேருடன் கோலஞ்சேரி என்ற இடத்தில் இருந்து காரில் சென்றுள்ளனர்.

முவாட்டுபுழா என்ற இடத்திற்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது கார் ஓட்டுநர் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்துள்ளார். கார் அதிவேகத்தில் சென்று சாலையோரத்திலிருந்த மின்கம்பி மீது வேகமாக மோதியது. அதன்பிறகும் அடங்காமல் அடுத்த கடையின் மீது மோதியதை தொடர்ந்து அருகிலிருந்த கட்டிடத்தில் பணியாற்றிய சிலர் மீதும் மோதியுள்ளது. 

இந்த விபத்தில் கார் முழுவதும் சேதமடைந்தது. காரில் பயணம் செய்து கொண்டிருந்த நடிகர் ஜார்ஜ், நிதின் மற்றும் அஸ்வின் ஜாய் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மற்றும் 3 கட்டிட தொழிலாளர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் கோலஞ்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பாசில் ஜார்ஜ் உயிரிழந்ததற்கு மலையாள திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.