லலிதா ஜூவல்லரியை மொட்டை அடித்த முருகன்..! நடிகையுடன் குடும்பம் நடத்தியவன்..! இப்போது கை, கால்கள் விழுந்து கவலைக்கிடம்!

சில மாதங்களுக்கு முன்னர் பிரபல நகைக்கடை கொள்ளை வழக்கில் காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்ட முருகன் பேச்சுத்திறனை இழந்துள்ள செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


லலிதா ஜுவல்லரி கொலை வழக்கில் சிக்கிக்கொண்ட சுரேஷ் நடிகைகளுடன் நடத்திய உல்லாசத்தை காவல்துறையினரிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.காந்தி ஜெயந்தி அன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 13 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் முதன்முதலில் காவல்துறையினர் மணிகண்டன் என்ற தொல்லைகள் சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர். அவனிடமிருந்து நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் பின்னர் அவனுடைய வாக்குமூலத்தின்படி சுரேஷ் மற்றும்ம் முருகன் ஆகியோரும் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. காவல்துறையினர் சென்னை அதிதீவிரமாக தேடுவதை அறிந்து கொண்ட சுரேஷ் அவர்களிடம் சரணடைந்தான்.

பின்னர் காவல்துறையினர் முருகனை தேடி வந்தனர். கர்நாடகா ஆந்திரா ஆகிய பல மாநிலங்களில் தன் கைவரிசையை காட்டிய முருகன் காவல்துறையினரிடம் இருந்து தலைமறைவாக வாழ்ந்து வந்தான். திருடிய நகைகள் அனைத்தையும் காவிரி ஆற்றுப்படுகையில் முருகன் மறைத்து வைத்திருந்தான். காவல்துறையினர் தன்னை பல மாநிலங்களில் தேடி வருவதை உணர்ந்த முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தான்.

பெங்களூரு காவல்துறையினர் 3 பேரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் கிடைத்துள்ளன. ஹைதராபாத் மாநிலத்திற்கு சென்றபோது அங்கு ப்ரொடியூசராக களமிறங்க  திட்டமிட்டனர். உடனடியாக பல்வேறு நடிகர் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை செய்து வந்துள்ளனர். ஆனால் நடிகர்கள் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதால் முருகன் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவர் தன் சகோதரியின் மகனான சுரேஷை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

அப்போது ஒரு நடிகையிடம் பேசியபோது, முதலில் கால்ஷீட் கொடுக்க மறுத்துவிட்டார். முதலில் அவர் கால்ஷீட் கொடுக்க மறுத்திருக்கிறார். அப்போது நகை கடை வியாபாரி என்று சுரேஷ் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவுடன் அவர் உடனடியாக கால்ஷீட் கொடுத்துள்ளார் மேலும் திருடப்பட்ட நகைகளில் சிலவற்றை அந்த நடிகையிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நடிகையும் அந்த நகையை வாங்கிக் கொண்டுள்ளார்.

ஆனால் இதைப்பற்றி ஒவ்வொரு நாளும், நடிகைகளின் பெயரை மட்டும் மாற்றி கூறி வருவதால் காவல்துறையினர் குழப்பம் அடைகின்றனர். மேலும் விசாரணையில் இன்னும் நிறைய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. காவல்துறையினர் ஒருவழியாக சுரேஷ் மற்றும் முருகனை தமிழ்நாடு-பெங்களூரு எல்லையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக முருகனின் உடல்நிலை மோசமாகி வந்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக மருத்துவர்கள் அவருடைய உடல்நிலையை கண்காணித்து வந்துள்ளனர். அப்போது திடீரென்று அவருடைய கை,கால்கள் செயலிழந்து போயுள்ளன. வாதநோயால் பாதிக்கப்படுவதால் முருகன் தற்போது பேசும் திறனை இழந்துள்ளார். இந்நிலையில் முருகனின் வழக்கறிஞர் அவருக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்ப்பதற்காக ஒரு மாதம் பிணை வழங்கும் படி கோரியுள்ளார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.