சாய் பல்லவி போதும்! நயன்தாராவை கூப்பிடுங்க! பிரபல ஹீரோ அடம்!

என்ஜிகே திரைப் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியானது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் சூர்யா இறுதியாக என்ஜிகே என்னும் படத்தில் நடித்தார். அந்த படமானது அரசியல் சார்ந்த திரில்லர் படமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய்பல்லவி கதாநாயகிகளாக நடித்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றியடையவில்லை.

இந்நிலையில், நடிகர் சூர்யா தன்னுடைய அடுத்த படத்தில் இயக்குனர் சிவாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இந்த படத்தில் "லேடி சூப்பர்ஸ்டார்" என்று ரசிகர்களால் என்றழைக்கப்படும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க நடிகர் சூர்யா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இயக்குனரோ சாய் பல்லவி கதாபாத்திரத்திற்கு பொறுத்தமாக இருப்பார் கூறுகிறார்.

ஆனால் சூர்யாவோ சாய்பல்லவி வேண்டாம் நயன்தாரா தான் சரியாக இருக்கும் என்று கூறி வருகிறாராம். இந்நிலையில் படக்குழுவினர் நடிகை நயன்தாராவை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். படக்குழுவினரின் நெருங்கிய வட்டாரங்கள், "படத்தின் கதையைப்பற்றி அவரிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.

இந்தப் படம் ஆக்ஷன் திரில்லராக இருக்கும். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இருந்தாலும் இன்னும் அவர் தன் முடிவினை வெளிப்படுத்தவில்லை. முடிவு சாதகமாக அமைந்தால் இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் நயன்தாரா இணைந்து நடிப்பார்" என்று கூறினர். 

இருவரும் இணைந்து நடித்தால் படம் நிச்சயம் வெற்றியடையும் என்று ரசிகர்கள் தற்போதே தங்கள் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.