அசுரன் படத்தின் முக்கிய காட்சி லீக்! அதிர்ச்சியில் தனுஷ் மற்றும் வெற்றி மாறன்!

பிரபல நடிகர் தனுஷ் நடித்து வெகு விரைவில் "அசுரன்" என்ற படம் வெளியாகயுள்ளது. எதிர்பாராவிதமாக இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் லீக் செய்யப்பட்டுள்ளது


தனுஷ் சமீபத்தில் அசுரன் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தை வெற்றிமாறன் எழுதியும், இயக்கியும் உள்ளார். தமிழ் மொழியில் மஞ்சு வாரியர் நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

மேலும் கலைப்புலி. எஸ். தானு இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் "வெக்கை" என்ற தமிழ் நாவலின் அடிப்படையில் உருவாகியுள்ளது. இந்த படமானது விரைவில் வெளியாக உள்ளது.

எதிர்பாராவிதமாக இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று கசிந்துள்ளது. தனுஷ் வேட்டி கட்டிக்கொண்டு சண்டை போடுவது போன்று காட்சியமைக்கப்பட்டுள்ளது. இது படக்குழுவினரை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக படக்குழுவினர் விசாரித்து வருகின்றனர். https://www.youtube.com/watch?v=ipvKGh0Fl0A