பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அவருடைய மனைவி மற்றும் முன்னாள் காதலியுடன் ஒருசேர எடுத்து கொண்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒரே நேரத்தில் மனைவி மற்றும் முன்னாள் காதலியுடன் நெருக்கம்! யுவராஜ் சிங் புகைப்படம் வைரல்!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஆல்-ரவுண்டர்களுள் ஒருவர் யுவராஜ் சிங். இந்திய அணி 2011-ஆம் ஆண்டு உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர். அந்த உலக கோப்பையில் தொடர்நாயகன் விருதையும் வென்றவர். சமீப காலங்களில் அவரால் திறம்பட விளையாட இயலவில்லை. இதனால் சில வாரங்களுக்கு முன்னர் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் அவர் தன்னுடைய பிரிவு உபசார நிகழ்ச்சிக்கு, தன் முன்னாள் காதலி மற்றும் மனைவியுடன் இணைந்து வந்திருந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
யுவராஜ் சிங் 2007-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை கிம் ஷர்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். கிம் ஷர்மா பாலிவுட் நடிகைகளில் ஒருவர் ஆவார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர். இருவருமே பொதுவெளியில் எந்தவித களங்கத்தையும் ஏற்படுத்தாது ஒத்த மனமாகவே பிரிந்தனர்.
2016-ஆம் ஆண்டு யுவராஜ் சிங் ஹேசெல் என்ற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது இவர்கள் வாழ்க்கையை மிகவும் அற்புதமாக வாழ்ந்து வருகின்றனர். பிரிவு உபசார விழாவில் மூவரும் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இதனை கிம் ஷர்மா சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார்.
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் புகைப்படத்தை பாராட்டி வருகின்றனர். 3 பேரின் உயரிய மனப்பான்மையை கண்டு நெட்டிசன்கள் மனம் நெகிழ்ந்துள்ளனர்.யுவராஜ் சிங்கின் பிரிவு உபசார விழாவில், சானியா மிர்சா, ஃபர்ஹான் அக்தர், ஷிபானி டாண்டேக்கர் போன்ற பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.