செம போதை! அரைகுறை ஆடை! காதலனுடன் பிரபல நடிகரின் மகள் ஆபாச நடனம்!

பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கானின் மகளான இரா கான், அமெரிக்காவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவரான மிஷால் கிருபாலனியுடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானின் முதல் மனைவி ரீமா தத்திற்கு மகளாக பிறந்தவர் இரா கான். இவர் பாலிவுட் திரையுலகின் இசையமைப்பாளரான ராம் சம்பத்திடம் உதவி இசையமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் தன்னுடைய வாழ்க்கை நிலையை "Committed" (ஒருவரை காதலிக்கிறேன்) என்று மாற்றினார். அதன் பின்னர் அமெரிக்கா நாட்டில் உள்ள நியூயார்க் நகரின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான மிஷால் கிரிபாலினியுடன் நெருங்கி பழகி வந்தார். 

சில வாரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் நானும் மிஷாலும் காதலித்து வருகிறோம் என்று கேள்வி பக்கத்தில் கூறியிருந்தார். இருவரும் ஜோடியாக இணைந்து பல்வேறு புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைத்தள அக்கவுண்ட்களில் பதிவேற்றம் செய்து வந்தனர்.

இதேபோன்று இருவரும் இணைந்து நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். இந்த வீடியோவில் இரா ஒரு குட்டை பாவாடை அணிந்து, மது போதையில் பாட்டிற்கு ஏற்றவாறு மிஷாலுடன் நடனமாடி கொண்டிருந்தார். (I just wanna dance with you) "நான் உன்னுடனே நடனம் ஆட விரும்புகிறேன்" என்ற பாடலுக்கு இருவரும் இணைந்து நடனமாடினர்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது