பிரபல பாலிவுட் நடிகரிடம் மேலாளராக பணியாற்றி வந்தார் இளம்பெண் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14வது மாடியில் இருந்து குதித்த சினிமா பெண் பிரபலம்! அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எதிர்கால கணவன்! பதற வைத்த சம்பவம்!

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சுஷாந்த் ராஜ்புத். இவர் எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் தோனியாக நடித்திருந்தார். இவரிடம் திஷா சலியான் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். திஷா சலியான் சுஷாந்த் ராஜ்புத் மட்டுமின்றி ஐஸ்வர்யா ராய், பார்த்தி ஷர்மா, ரியா சக்கரவர்த்தி ஆகிய நடிகர்களுக்கும் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்தது. திடீரென்று நேற்று முன்தினம் இரவு தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இவருடைய மறைவிற்கு சுஷாந்த் ராஜ்புத் உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் திஷா சலியானின் வருங்கால கணவர் அவருடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திஷா சலியானின் தற்கொலைக்கு பிரபல நடிகர் சுஷாந்த் ராஜ்புத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் வருண் உட்பட பலரும் திஷா சலியானின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.