நள்ளிரவில் பிரபல நடிகையின் வீட்டுக் கதவை தட்டிய போலீஸ்! விவகாரமான காரணம்! ஏன் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகை ஒருவரை மோசடி வழக்கில் மும்பை காவல்துறையினர் தேடி வரும் சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் நடித்த பல்வேறு படங்கள் வெற்றி அடைந்துள்ளன. இவர் கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் நடித்த லிங்கா திரைப்படத்தில் அவருடைய ஜோடியாக நடித்தார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறி பணம் பெற்றுவிட்டு நிகழ்ச்சிக்கு செல்லாமல் இருந்துள்ளார். 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் நகரில் சோனாக்ஷி சின்ஹாவை நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்துள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான பிரமோத் சர்மா சோனாக்ஷி சின்ஹா மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். வழக்கில் சோனாக்ஷி சின்ஹாவிடம் வாக்குமூலத்தைப் பெற காவல்துறையினர் மும்பைக்கு வந்தனர். ஆனால் அவர் மும்பையில் இல்லை. இதனால் அவர்கள் வருத்தத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில், சோனாக்ஷி சின்ஹாவின் செய்தி தொடர்பாளர் இந்த நிகழ்வை பற்றி கூறியுள்ளார்

அதாவது, சென்ற ஆண்டு மும்பையில் நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சோனாக்ஷி சின்ஹாவை அழைத்தனர். ஆனால் அவருக்கு அளிக்க வேண்டிய சம்பளத்தை அளிக்கவில்லை. பயணம் செய்வதற்கு தொடர்பான டிக்கெட்டுகளை அனுப்புமாறு கேட்டும், விழா குழுவினர் அதனை அனுப்பவில்லை. இதனால்தான் சோனாக்ஷி சின்ஹாவால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. ஒன்பது ஆண்டுகளாக திரைத்துறையில் ஜொலித்து வரும் சோனாக்ஷி சின்ஹா மீது அவதூறு கிளப்ப இந்த மாதிரி கீழ்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.