கல்யாணம் ஆன பிறகும் இப்படியா? வாரிசு நடிகையின் கிளாமர் புகைப்படம் வைரல்!

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான சோனம் கபூர் சமூகவலைதளங்களில் தன்னுடைய ஃபேஷனான உடைகளை வெளிப்படுத்தி வருவது சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.


இன்ஸ்டாகிராமில் சோனம் கபூர் 20 மில்லியன் பின்பற்றுபவர்களை கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் தினமும் தன்னுடைய புதிய கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். 

இந்நிலையில் சோனம் கபூர் இன்ஸ்டாகிராமில் ஒரு அழகிய புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். அதாவது தோளுக்கு இறங்கிய பச்சை நிற உடையை அணிந்திருந்தார். இந்த உடையை எமீலியா விக்ஸடெட் என்பவர் வடிவமைத்திருந்தார். இந்த உடலில் சோனம் கபூரின் உடலழகு பெரிதளவில் வெளிப்பட்டுள்ளது. 

அவருடைய கையில் செயின் வகையான ஜூடித் லேய்பர் தோல்பையை வைத்திருந்தார். மேலும் உதட்டில், பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தார். இவரை, அவருடைய தங்கைகளான ரியா கபூர் மற்றும் சன்யா கபூர் வடிவமைத்திருந்தார்கள். இவர் துல்கர் சல்மானுடன் "சோயா ஃபேக்டர்" என்னும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.