ஷில்பா ஷெட்டி முதல் மனீசா கொய்ராலா வரை..! விஜயகுமார் நாயுடு கல்கி பகவான் ஆன இன்னொரு கதை!

கல்கி ஆசிரமங்களிலும், என்.கே.வி கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனங்களிலும் திடீரென்று ஐ.டி. ரெய்டு நடந்திருப்பது வைரலாகி வருகிறது.


வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தான் கல்கி பகவானின் சொந்த ஊராகும். ஆரம்ப காலத்தில் தன்னுடைய தந்தை ரயில்வே ஊழியராக இருந்ததால் 6 வயதிலேயே சென்னைக்கு இடம்பெயர்ந்தார். டான்பாஸ்கோ பள்ளியில் பள்ளிப்படிப்பும், வைஷ்ணவா கல்லூரியில் பட்டப்படிப்பும் முடித்து தொடக்கத்தில் ஒரு சாதாரண எல்ஐசி ஏஜென்ட் ஆக பணியாற்றி வந்தார். 1989-ஆம் ஆண்டில் திடீரென்று பூந்தமல்லி அருகே உள்ள நேமம் கிராமத்தில் கல்கி ஆசிரமத்தை தொடங்கினார்.

ஆந்திரா மாநிலம்தான் கல்கி பகவான் ஆசிரமங்களின் தலைமை இடமாகும். ஸ்ரீ பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர் தான் இந்த ஆசிரமத்தை நிறுவினார். தற்போது இந்த ஆசனங்கள் நாடுமுழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் சுமார் 20 கிளைகள் உள்ளன.

ஒரு கட்டத்தில் சினிமா பிரபலங்கள் கல்கி ஆசிரமத்திற்கு படை எடுக்க ஆரம்பித்தனர். 90களில் பிரபலமாக இருந்த மனீஷா கொய்ராலா வந்த பிறக கல்கி ஆசிரமம் மேலும் பிரபலம் அடைந்தது. பின்னர் ஷில்பா ஷெட்டி ஆசிரமத்திற்கு வந்தார். மேலும் பிரபல இந்தி நடிகர் ஹிருதிக் ரோசனும் இந்த கல்கி பகவானின் பக்தர்.

இப்படியாக நடிகர்கள் வர ஆரம்பித்த பிறகு அரசியல்வாதிகளும் வர ஆரம்பித்த பிறகு உள்ளே கல்கி பகவானை தரிசிக்க கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தார்கள். கல்கி பகவானை பார்க்க வேண்டும என்றால் தற்போது 5000 ரூபாய் வசூலிக்கிறார்கள். மேலும் பாத பூஜை என்று டாரிப் போட்டு வசூல் நடைபெறுகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக இந்த ஆசிரமங்களில்  வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் ஆசிரமத்தில் உள்ள இளைஞர்களுக்கு போதைப் பொருள் கொடுத்து அவர்களை ஆபாச செயல்களில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாக கூறப்பட்டது. மேலும் சிறப்பு பூஜை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்பட்டது ஆகும் புகார் எழுந்தது. நீதிமன்றங்கள் வரை சென்ற இத்தகைய புகார்கள் தற்போது தான் சற்று ஓய்ந்துள்ளன.

கல்கி நிறுவனங்களுக்கு மேலும்‌ ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது. கல்கி ஆசிரமங்களிலும், அவருடைய மகனான கிருஷ்ணா நடத்திவரும் பக்தாலங்களிலும் நாடு முழுவதிலும் நேற்று ஐ.டி. ரைட் நடத்தப்பட்டுள்ளது. இதில் கணக்கில் வராத பல பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆயிரம் கோடி மதிப்பிலான வரி ஏய்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய வருமானவரி சோதனைகளின் மூலமாக 20 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.