47 வயதில் வெளியிடும் புகைப்படமா இது? ரசிகர்களை உச் கொட்ட வைக்கும் பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகைளுள் ஒருவர் தன்னுடைய கவர்ச்சியான உடற்பயிற்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருப்பது வைரலாகி வருகிறது.


பாலிவுட் நடிகைகளில் பல வெற்றிப் படங்களை அளித்தவர் மலைக்கா அரோரா. இவருக்கு வயது 47. இவர் நடித்த "சாரா சாயா", "கால் தமால்" பிரம்மாண்ட வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இவர் மற்றொரு பாலிவுட் புகழான கதாநாயகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மலைக்கா அரோராவிற்கு சமூகவலைத்தளங்களில் பல லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் தன்னுடைய தினசரி நிகழ்வுகளை தவறாமல் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவார். 

மலைக்கா அரோராவுக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் ஆர்வம் உள்ளது. அவர் தவறாமல் உடற்பயிற்சியிலும், யோகா பயிற்சியிலும் ஈடுபட கூடியவர். இந்நிலையில் நேற்று காலை இவர் ஜிம் சென்று உடற் பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். 

நீல நிற ஸ்லீவ்லெஸ் உடையில், தன்னுடைய மெல்லிய இடுப்பு தெரியுமாறு உடற்பயிற்சி செய்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதை கண்ட ரசிகர்கள் அவருடைய உடல் தகுதியை கண்டு மயங்கி உள்ளனர். மேலும் அவருடைய உடலழகிற்கான ரகசியத்தை வெளியிடுமாறு கூறியுள்ளனர்.

இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. சமீபத்தில் இவர் தன்னுடைய காதலனான அர்ஜுன் கபூருடன் நியூயார்க் நகரில் விடுமுறையை கொண்டாடி வந்தது குறிப்பிடத்தக்கது.