ஆபத்தான நிலையில் அந்நிய நேரடி முதலீடு. என்னாகும் இந்தியா?

அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 1.4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ள தகவல் உள்நாட்டு வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது.


நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் வளா்ச்சியை ஊக்குவிக்க அந்நிய நேரடி முதலீடு என்பது அவசியமான ஒன்றாகும். அதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த ஆண்டு சில்லறை வா்த்தகம், நிலக்கரி சுரங்கம் மற்றும் ஒப்பந்த தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் அந்நிய முதலீட்டிற்கான விதிமுறைகளை தளா்த்தியது.

அதன்படி இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு ரூ.76,800 கோடியாக உள்ளதாகவும். கடந்த 2018-19-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1,082 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீடுகள் ஈட்டியதாகவும். கடந்த காலத்தை ஒப்பிடுகையில் இது 1.4 சதவீதம் குறைவு என்று தெரிவிக்கிறது மத்திய அரசின் அறிக்கை ஒன்று.

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகள், புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் கட்டமைப்பை உருவாக்க பெரும் பங்கு வகிக்கிறது. இந்த மூதலீடுகள் நீண்டகாலம் மற்றும் குறுகிய காலம் என இரண்டு வகைபாடுகளைக் கொண்டுள்ளது.

இரண்டாவது முறையாக பதவிக்கு வந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் செய்யும் முதலீடுகள் மூலமாகக் கிடைக்கும் லாபத்திற்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வரி விதித்திருப்பதே இந்த சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக இந்தியாவில் தொலைத் தொடர்பு மற்றும் மருத்துவ துறையில் தான் அதிகப்படியான அந்நிய நேரடி முதலீடுகள் ஈட்டிப்படுகின்றன. சென்ற நிதியாண்டில் தொலைத்தொடர்பு துறையில் மட்டும் வெளிநாட்டு முதலீடு 57 சதவீதம் குறைந்து 1 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. மருத்துவ துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதம் சரிந்து 1859 கோடியாக உள்ளது.

இந்தியாவில் அதிகப்படியாக முதலீடு செய்யும் நாடுகளில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் அந்நிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

இதன் ஒரு பகுதியாக நிலக்கரிச் சுரங்கம் அமைக்க 100 சதவிதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி மற்றும் டிஜிட்டல் மீடியா துறையில் அரசு அனுமதியுடன் 26 சதவிதம் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி என்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

சர்வதேச அளவிலான வெளிநாட்டு நிறுவனங்கள், உலக வங்கியின் மூலமாக வெளியிடப்பட்டிருக்கும்,தர வரிசை பட்டியலை கவனித்து வருகின்றன என்றும், எளிதாக தொழில் துவங்க ஏதுவான நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா தற்போது வேகமாக பின்னோக்கி வருகின்றது என தெரிவித்துள்ளது.

2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான ஒன்பது மாத காலகட்டத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 3,676 கோடி டாலராக இருந்தது. கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 3,349 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீட்டுடன் ஒப்பிடும்போது இது 10 சதவீதம் அதிகமாகும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏறு முகத்துடன் இருந்த தங்கம் விலை. நாட்டின் பணவீக்க உயர்ந்ததன் காரணமாக கடந்த புதன்கிழமை வர்த்தகத்தில் ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 4,100 ரூபாயைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அதன் முறையான செயல்பாடுகளை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க தயாா் நிலையில் இருப்பதாக ரிசா்வ் வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதன் காரணமாக கடந்த 7 நாள்களாக சரிவை சந்தித்து வந்த பங்குச் சந்தைகள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகத்தில் சற்று ஏற்றம் கண்டது. ஏற்கெனவே இந்தியாவில் எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்வை கண்டு வரும் இந்த வேளையில். ஈரான் மீதான எண்ணெய் கிணறு தாக்குதலால் உலக அளவில் அளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

இந்தியா, அதன் கச்சா எண்ணெய் தேவையில் 83 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இன்னும் சில நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணியன் கலியமூர்த்தி