எல்லா டிரஸ்சயும் கழட்டுங்க..! பயிற்சிக்கு வந்த பெண் ஊழியர்களுக்கு டாக்டர்களால் நேர்ந்த விபரீதம்! என்னாச்சு தெரியுமா?

பயிற்சிக்கு வந்த பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து சோதனை மேற் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி, குஜராத்தில் சூரத் நகராட்சியால் நடத்தப்படும், சூரத் முனிசிபல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் (SMIMER), நகராட்சிக்கான பயிற்சி தேர்வர்கள் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இந்த தேர்வு எழுதுவதற்காக வந்த 10 பெண்களிடம் பல விதமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது . 

அதிலும் பத்து பெண்களை ஒரே அறையில் நிற்கவைத்து நிர்வாணமாக மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் திருமணமாகாத பெண்களை கூட நிர்வாணமாக நிற்க வைத்து கர்ப்ப பரிசோதனை செய்தது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பயிற்சிக்கு வந்த அந்த பெண்கள் மனமுடைந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பின்பு தேர்வு எழுத வந்த தேர்வாளர்கள் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் 15 நாட்களில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புகாரை ஆய்வு செய்யும் குழுவில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் டாக்டர் கல்பனா தேசாய், உதவி நகராட்சி ஆணையர் காயத்ரி ஜரிவாலா மற்றும் நிர்வாக பொறியாளர் துருபி கலத்தியா ஆகியோர் உள்ளனர். இந்த சம்பவம் மனிதகுலத்திற்கு எதிரானதாகவும் ஒருவரின் தனிப்பட்ட உரிமை மீறலை இந்த சம்பவம் காட்டுகிறது எனவும் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் இந்த நிலையில் சூரத் மேயர் ஜெகதீஷ் படேல் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த விசாரணை கூடிய விரைவில் நேர்மையான முறையில் நடைபெறும் எனவும் உறுதி அளித்திருக்கிறார்.