8 மாத கர்ப்பிணி மனைவி கொடூர கொலை! ஒரு மாதமாக வீட்டின் பின்புறம் ஒளிந்திருந்த கணவன்! சற்று முன் வெளியான பகீர் தகவல்!

லண்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளிப் பெண்ணான தேவி உன்மாத்தால்லிகடோ வை அவரது முன்னாள் கணவர் அம்பெய்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய வம்சாவளிப் பெண்ணான தேவி உன்மாத்தால்லிகடோ கிழக்கு லண்டனில் தன்னுடைய இரண்டாவது கணவரான இமீடியாஸ் முஹம்மது அவருடன் வசித்து உள்ளார். இந்நிலையில் தேவி தனது இரண்டாவது கணவர் மூலம் கர்ப்பம் தரித்துள்ளார். சுமார் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது தேவியை அவருடைய முன்னாள் கணவர் ரமாநோட்ஜ் அம்பு எய்தி கொலை செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவி முதலில் ரமாநோட்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் சட்டப்படி விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இதனை அடுத்து தேவி இரண்டாவதாக இமிடியாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு கிழக்கு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். இதனை அடுத்து தேவி கர்ப்பம் தரித்து இருக்கிறார். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் ஏற்பட்டன.

தேவி மற்றும் அவருடைய இரண்டாவது கணவரான இம்தியாஸ் இருவரும் கிழக்கு லண்டனில் இருக்கும் அவர்களது வீட்டில் இருந்தபோது தேவியின் முதல் கணவரான ரமாநோட்ஜ் வீட்டிற்குள் வில்லும் அம்பும் ஏந்தி கொண்டு அவர்கள் இருவரையும் தாக்குவதற்காக சென்றிருக்கிறார். இதனால் தேவியும் அவரது இரண்டாவது கணவரும் ஆளுக்கு ஒரு விஷயம் உயிரை காப்பாற்றுவதற்காக ஓடியுள்ளனர். அப்போது 8 மாத கர்ப்பிணி பெண்ணாக இருந்த தேவி படிக்கட்டில் ஏரி தப்பிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் ரமா நோட்ஜ் கையிலிருந்த வில்லையும் அம்பையும் பயன்படுத்தி தேவியின் மீது ஏவி விட்டு இருக்கிறார். அந்த அம்பு தேவியின் இதயத்தை துளைத்தது. 

சம்பவம் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் தேவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் தீவிர போராட்டத்திற்கு பின்பு தேவியின் வயிற்றில் இருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு எடுத்தனர் அதனை அடுத்து சிறிது நேரத்திலேயே தேவி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் போலீசார் தேவியை கொலை செய்த அவரது முதல் கணவரை கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அப்போது பேசிய தேவியின் முதல் கணவரான ரமாநோட்ஜ் தேவியும் அவரது இரண்டாவது கணவரும் ஒன்றாக இணைந்து வாழ்வதை கண்டு பொறாமை தாங்க இயலாமல் அவரைக் கொலை செய்ததாக கூறினார். இந்த கொலை செய்வதற்காக தேவியின் வீட்டின் பின்னால் இருக்கும் ஒரு அறையில் ஒரு மாத காலமாக பதுங்கி இருந்ததையும் விசாரணையில் கூறினார். மேலும் தேவியை அமைதி கொலை செய்வதற்காக அம்பு வாங்கி வந்ததாகவும் கூறினார் ‌. இதனையடுத்து ரமாநோட்ஜ் போலீஸாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.