காமராஜர் காலத்து எம்.எல்.ஏ. மாட்டுத்தொழுவத்தில் பரிதாப வாழ்க்கை! கைகொடுக்குமா அரசு?

பிரபல அரசியல் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ மாட்டு தொழுவத்தில் உயிர்வாழ சிரமப்பட்டு கொண்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ராஜாஜி, காமராஜர் ஆகிய பெருந்தலைவர்களின் காலத்தில்  அரசியலில் ஈடுபட்டவர் கிருஷ்ணவேணி அம்மையார். இவருடைய கணவரின் பெயர் அய்யனார். இவர் 1952-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். இதேபோன்று கிருஷ்ணவேணி அம்மையார், காமராஜரின் ஆட்சி காலத்தில் ஆண்டிபட்டியில் மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்வானார். 

இவர்களுக்கு அந்த காலத்தில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தன. இவர்களுடைய சொந்த நிலங்களில் பல பள்ளிகளை கட்டினர். சமுதாயத்திற்கு தேவையான அனைத்தையும் செய்தனர்.  மேலும் பள்ளியை பெரிதாக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கத்திற்கு எழுதி வைத்தனர்.

காமராஜர் மீது இருவருக்குமே அதீத பற்று இருந்தது. காமராஜர் இறந்த துக்கம் தாங்காமல் அய்யனார் இறந்து போனார்.  இத்தம்பதியினருக்கு 3 மகன்கள் பிறந்தனர். சுந்தரமூர்த்தி, வெற்றிவேந்தன், மூவேந்தன் என்று அவர்களுக்குப் பெயர் வைத்தனர். கணவன் இறந்தவுடன் கிருஷ்ணவேணி அம்மையாரின் வாழ்க்கை தடம் புரண்டது. 

இவருடைய மூத்த மகன் திருமணம் செய்துகொண்டு நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். மூவேந்தர் 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். பறக்க ஆயிரம் அரசியல்வாதிகளை தெரிந்திருந்தும் அவர்களிடம் உதவி கேட்பதற்கு கிருஷ்ணவேணி அம்மையார் கூச்சப்பட்டார். 

இளைய மகன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன்படி முதல் திரைப்படத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து இருந்தபோது அரசியலில் குதித்தான். காங்கிரஸ் கட்சியின் முதலில் சேர்ந்த அவர், பின்னர் சரத்பவார் கட்சிக்கு தாவினார். 2003-ஆம் ஆண்டில் கிட்னி ஃபெயிலியரினால் இறந்து போனார். 

தற்போது இவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். கிடைத்த கூலி வேலைகளை எல்லாம் செய்து பிழைப்பு தேடி வருகிறார். இவருடைய நடு மருமகள் ரேணுகா தான் குடும்பத்தை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் நோய்வாய்பட்டு இருந்ததால் தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது மருத்துவர் ஒருவர் இவருக்கு உதவி செய்ததோடு, இவரைப் பற்றிய தகவலை ஊடகத்தில் தெரிவித்தார்.

அதன் பின்னரே, இவருடைய சிரமத்தை பற்றி வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது. தற்போது தேனி மாவட்டம் அச்சம்பட்டியிலுள்ள மாட்டுத்தொழுவம் ஒன்றில் ஒரு மூலையில் மிகவும் சிரமப்பட்டு வசித்து வருகிறார்.

இவரைப்பற்றி அழிந்த நிலையில் சில அரசியல்வாதிகள் இவருக்கு உதவ முன்வந்தால் நன்றாக இருக்கும்.