என் கணவனுக்கு மது! என்னுடன் செக்ஸ்! ரியல் எஸ்டேட் அதிபர் மீது இளம் பெண் பகீர் புகார்!

ஈரோடு: பாலியல் புகாரில் சிக்கியுள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் மீது நாளுக்கு நாள் புதுப்புது செக்ஸ் புகார்கள் கூறப்படுவதால், போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


சில நாள் முன்பாக, கல்லூரி மாணவி ஒருவர், ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்கிறார் எனக் கூறி, ராதாகிருஷ்ணன் மீது உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதையடுத்து, உடனடியாக, அவரை போலீசார் கைது செய்தனர். கதை இத்தோடு நிற்கவில்லை. அவர் கைது செய்யப்பட்ட பிறகே, மற்ற பெண்களும் புகார் கூற தொடங்கியுள்ளனர்.

இதன்படி, திருமணமான பெண் ஒருவர், ஈரோடு எஸ்பி அலுவலகம் வந்து, ராதாகிருஷ்ணன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ''எனக்கு, திருமணமாகி, ஒரு மகன், மகள் உள்ளனர். எனது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். அவருக்கு ராதாகிருஷ்ணன், ஒயின்ஷாப்பில் பழக்கமாகியுள்ளார். இதன்பேரில், அடிக்கடி என் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். நானும், நல்ல முறையில் பழகி வந்தேன். ஆனால், எனது கணவர் இதைப் பார்த்து சந்தேகப்பட்டு, என்னுடன் அடிக்கடி சண்டை போடதொடங்கவே, நான் தற்கொலைக்கு முயன்றேன்.

பின்னர், அண்டை வீட்டினர் காப்பாற்றினார்கள். இதற்காக, மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த என்னை நேரில் வந்து பார்த்த ராதாகிருஷ்ணன், கையில் பணம் கொடுத்துவிட்டுச் சென்றார். நான் உடல்நலமாகி, வீடு வந்தபின், ஒருநாள் யாருமில்லாதபோது வீட்டுக்கு வந்த, ராதாகிருஷ்ணன், என்னை கதற கதற பலாத்காரம் செய்தார். ஆசை வார்த்தை கூறி, இதை அடிக்கடி செய்து வந்தார். என் கணவருக்கு மது வாங்கி கொடுத்துவிட்டு, இப்படி அவர் செய்துவந்தார்.

அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால், நானும் புகார் கூற வந்தேன்,'' என, அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.  இந்த சம்பவம் ஈரோடு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.