சார்ஜ் நிக்க மாட்டுதா? 50 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் செல்போன் அறிமுகம் !

ஆவெனிர் டெலிகாம் என்ற நிறுவனம் எனெர்ஜிஸிர் என்ற ஒரு புதியவகை ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது இதன் சிறப்பம்சமே இது 50 நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் சக்தி வாய்ந்தது.


இது பவர் பாங்கை காட்டிலும் மிகுந்த சார்ஜ் நிற்கும் திறனை கொண்டது.   பிரான்ஸ் தலைநகர் பாரீசை மையமாக கொண்டு இயங்கிவரும் ஆவெனிர் டெலிகாம் என்ற நிறுவனம் எனெர்ஜிஸெர் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.


இதில் பாப் அப் செல்பி கேமிரா வசதியும் இடம் பெற்றுள்ளது.  பார்ப்பதற்கு பவர் பாங்கை போலவே தோன்றும் இந்த போனின் சிறப்பம்சமே இதன் பேட்டரி தான்.


இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்தது 50  நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது


அதிக சக்தி கொண்ட பேட்டரி என்பதால் இந்த ஸ்மார்ட்போனின் எடை கூடுதலாக உள்ளது.  6.2 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 3 பின்பக்க கேமரா என்று நவீன அம்சங்களையும் எனெர்ஜிஸெர் கொண்டுள்ளது.  இதன் பேட்டரி திறண்  18000 எம்.ஏ.எச் ஆகும்.

இதில் 46 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கும் வசதியை கொண்டுள்ளது 4 நாட்கள் தொடர்ச்சியாக கால் பேசவும் சார்ஜ் நிற்கும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது

இதன் விலை இன்னும் அறிவிக்க படவில்லை சர்வதேச சந்தையில் வெளியிடும் போது தான் இதன் விலை அறிவிக்கப்படும் என்றும் இந் நிறுவனம் கூறியுள்ளது