மனைவியுடன் சேர்ந்து சொந்தத் தம்பியைக் கொலை செய்த அண்ணன்... காரணம் தெரிஞ்சா அதிர்ந்தே போவீங்க...

சொந்த தம்பியை அண்ணன் ஒருவர் தன் மனைவியுடன் சேர்ந்து கொலை செய்வதற்கும் சம்பவமானது கோவாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சந்தீஷ் என்பவர் கோவாவை சேர்ந்தவர். இவருடைய மனைவியின் பெயர் லத்திகா. இவருக்கு சர்வேஷ் என்ற இளைய சகோதரர் உள்ளார். 3 பேரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

2 தினங்களுக்கு முன்னர், சர்வேஷ் தன்னுடைய வீட்டில் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். லத்திகா மற்றும் சந்தீஷ் அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சர்வேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் லத்திகா மற்றும் சந்தீஷிடம் தனித்தனியாக விசாரித்தனர். விசாரித்தபோது அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

கணவன் மற்றும் மனைவியை மறைமுகமாக காவல்துறையினர் கண்காணித்தனர். அப்போது அவர்கள் சர்வேஷின் பணத்தை மறைமுகமாக எடுத்து சென்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் மீண்டும் விசாரித்தனர்.

அப்போது லத்திகா தன் கணவனுடன் சேர்ந்து சர்வேஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கூறியதாவது: நாங்கள் வீடு மற்றும் கார் வாங்க சர்வேஷ் எங்களுக்கு பண உதவி செய்தார். சில காலம் கழித்து அவர் எங்களிடம் பணத்தைத் திரும்ப கேட்டார். இதனால் எங்களுக்குள் சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டன. அப்போது சர்வேஷ் என் கணவர் முன்னே என்னை அடித்து, என் புடவையை கிழித்தார். இதனால் நாங்கள் இருவரும் மிகவும் ஆத்திரமடைந்தோம். பின்னர், வலுவான பொருளைக் கொண்டு அவரை தாக்கினோம். தாக்கியதில் எதிர்பாராவிதமாக அவர் இறந்து போனார்" என்று வாக்குமூலம் அளித்தார். 

இதனை தொடர்ந்து சந்தீஷ் மற்றும் லத்திகாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.