எடப்பாடியாரின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு... ஆனந்தத்தில் மக்கள்... அலறிய தி.மு.க.

அ.தி.மு.க.வின் திட்டத்தைக் காப்பியடித்து திருச்சியில் தன்னுடைய சொந்த திட்டம் போன்று அறிவித்தார் ஸ்டாலின். அதாவது மாதம் 1000 ரூபாய் குடும்பத் தலைவிகளுக்குக் கொடுப்பதை மாபெரும் சலுகை போன்று அறிவித்தார்.


அந்த அறிவிப்பை தூக்கி சாப்பிடுவது போன்று சூப்பர் டூப்பர் அறிவிப்பை வெளியிட்டு விட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரது அறிவிப்பு இப்போது பட்டிதொட்டியெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

உலக மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாக மகளிர் அனைவரும் மனநிறைவு கொள்ளும் விதமாக, ஆண்டுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் 6 இலவசம், தமிழ்நாட்டில் அனைத்து இல்லங்களிலும் பொருளாதார சமநிலையை ஏற்படுத்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் என்று இருபெரும் சரித்திர சாதனை படைக்கும் வாக்குறுதிகளை அறிவித்தார்.

ஒரு குடும்பத்தில் ஓராண்டுக்கு 9 முதல் 12 சமையல் எரிவாயு சிலிண்டர்களை குடும்பத்தலைவிகள் பயன்படுத்துகின்றனர். இதற்காக அவர்கள் ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் ரூபாய் முதல் 9 ஆயிரம் வரை செலவும் செய்கின்றனர். இதனை மிச்சப்படுத்தும் வகையில் எடப்பாடியார் வெளியிட்டுள்ள அறிவிப்பை மக்கள் வரவேற்கின்றனர்.

அதேநேரம், நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வசிக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களில் பெண்கள் அன்றாட செலவை சமாளிப்பதற்குள் படாதபாடு படுகிறார்கள். அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ள மாதம் 1,500 ரூபாய் என்பது பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்கிறார்கள்.

யார்கிட்டே... எடப்பாடிகிட்டே போட்டியா என்று அ.தி.மு.கவினர் தி.மு.க.வை நோக்கி கிண்டல் செய்கிறார்கள்.