ஏழு பேர் விடுதலைக்கு எடப்பாடியார் மீண்டும் போர்க்கொடி. விரைந்துவருகிறது விடுதலை நாள்.

தீர்மானம் நிறைவேற்றி வைத்தால் அதற்கு ஒப்புதல் கொடுப்பதுதான் கவர்னரின் பணி. அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்திவருகிறார் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித். இந்த விஷயத்தில் முதல்வர்கோபமாகி நெருக்குதல் கொடுத்ததுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


ஏற்கனவே இது போன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் காலம் தாழ்த்தினார் கவர்னர். உடனே அரசாணை வெளியிட்டு அதிரவைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன்பிறகுதான் பதறியடித்து அந்த சட்டத்துக்கு அனுமதி கொடுத்தார் கவனர்.

அதேபோன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை கவர்னர் எந்த முடிவும் எடுக்கவே இல்லை.

சமீபத்தில் பேரறிவாளன் நீதிமன்றத்துக்கு கொண்டுபோன வழக்கில், இரண்டு அல்லது மூன்று நாட்களில் கவர்னர் தன்னுடைய முடிவை அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் முடிவு அறிவிக்கப்படவில்லை. 

இந்த விவகாரத்தில் மிகவும் அக்கறை காட்டி வந்த முதல்வர் எடப்பாடி, இனியும் பொறுப்பதற்கில்லை என நேற்று அதிரடியாக களத்தில் இறங்கினார். நேற்று இரவு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் முடிந்தவுடன், அங்கிருந்து நேராக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்குச் சென்று, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்தார். அப்போது 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கோரிக்கை மனுவையும் அளித்தார்.

முதல்வரின் இந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாகக் கூறப்படுகிறது. முதல்வரின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏழு பேர் விடுதலையில் அவர் காட்டும் அக்கறை குறித்து தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

 இனியாவது எழுவர் விடுதலையில் நல்லது நடக்கட்டும்.