முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி நம்ம எடப்பாடியார்..! டாக்டர் எடப்பாடியார்..! பட்டம் கொடுத்து கவுரவிக்கும் பல்கலைக்கழகம்!
சென்னை மதுரவாயலில் செயல்பட்டு வருகிறது டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ஏசி சண்முகத்திற்கு சொந்தமானது.
இந்த பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 20ந் தேதி மதுரவாயலில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டாக்டர் பட்டத்தை பெற உள்ளார். எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்த பட்டத்தை வழங்க உள்ளது.